

சென்னை, ஏப்.5: பத்திரிகையாளரும் எழுத்தாளருமான கிருஷ்ணா டாவின்சி (46) உடல் நலக்குறைவு காரணமாக புதன்கிழமை (ஏப்ரல் 4) காலமானார்.
அவருக்கு மனைவி ஜெயராணி மற்றும் குழந்தை நேயா ஆகியோர் உள்ளனர்.
அவரது இயற்பெயர் வெங்கட கிருஷ்ணன். குமுதம் நிறுவனத்தில் பொறுப்பு ஆசிரியர் மற்றும் சிறப்பு செய்தியாளராகப் பணியாற்றியுள்ளார். மேலும், சில திரைப்படங்களுக்கும் கதை,வசனம் எழுதியுள்ளார்.கடந்த சில நாள்களுக்கு முன்பாக நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு புதன்கிழமை உயிரிழந்தார். இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை பிற்பகல் போரூர் ஆற்காடு சாலையில் உள்ள மின் மயானத்தில் நடந்தது. மேலும் தகவலுக்கு 9841007227.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.