சென்னையில் முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு (2012) சாலை விபத்துகளும், அதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
அதேவேளையில் பாதசாரிகளை விட மோட்டார் சைக்கிளில் செல்வோரே அதிகளவு இறந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதற்கு முன்பு வரை பாதசாரிகளே அதிகம் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
சாலை விபத்துகளினால் இறப்போரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டிருக்கும் வேளையில், சென்னை பெருநகர பகுதியில் சாலை விபத்துகளினால் இறப்போரின் எண்ணிக்கை குறைந்துள்ளது வாகன ஓட்டிகளை மட்டுமன்றி பொதுமக்களையும் சிறிது மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2012-ல் 67,947 சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதில் 16,233 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 2012-ஆம் ஆண்டு 9,981 சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதில் 1,449 பேர் இறந்துள்ளனர், 8,361 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த 2011-ஆம் ஆண்டு 10,297 சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதில் 1,504 இறந்துள்ளனர், 8,197 பேர் காயமடைந்துள்ளனர். 2011-ஆம் ஆண்டு சாலை விபத்து புள்ளி விவரங்களை ஒப்பீடும்போது, 316 சாலை விபத்துகள் குறைந்துள்ளன. அதேபோல 0.5 சதவீகிதமாக அதிகரித்துக் சென்றுக் கொண்டிருந்த இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. முக்கியமாக 2011-ஆம் ஆண்டை விட 2012-ஆம் ஆண்டில் 55 பேர் குறைவாக இறந்துள்ளனர். அதேநேரத்தில் 2011-ஐ விட 2012-ல் 164 பேர் அதிகமாக காயமடைந்தனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளை ஒப்பிடும்போது 2012-ல்தான் சென்னையில் சாலை விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக போக்குவரத்து காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். அதேவேளையில் 2012-ல் கிடைத்துள்ள சாலை விபத்து குறித்தான மொத்த புள்ளிவிவரங்களில் மற்றொரு வித்தியாசமான நிகழ்வும் நடைபெற்றுள்ளது. இதுவரை சாலை விபத்து புள்ளி விவரங்களில் பாதசாரிகளே உயிரிழந்தோர் பட்டியலில் முதலிடத்தில் இருந்தனர், அதற்கு அடுத்தப்படியாக மோட்டார் சைக்கிளில் விபத்தில் சிக்கி இறப்போர் எண்ணிக்கை இருந்தது.
ஆனால் 2012-ல் மோட்டார் சைக்கிளில் சென்று விபத்தில் 684 பேர் இறந்துள்ளனர், 667 பேர் காயமடைந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. அதேவேளையில் சாலையில் நடந்து செல்லும்போது விபத்தில் சிக்கி 564 பேர் இறந்தனர், 546 பேர் காயமடைந்துள்ளனர். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. குறிப்பாக மோட்டார் சைக்கிளில் கவனக்குறைவாக ஓட்டுவது, போக்குவரத்து விதிமுறைகளை மீறுவது, மது அருந்திவிட்டு மோட்டார் சைக்கிளை ஓட்டுவது போன்ற காரணங்களால் மோட்டார் சைக்கிளில் சென்று விபத்தில் சிக்கி இறந்தோர் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாக போக்குவரத்துப் பிரிவு காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதேநேரத்தில் பாதசாரிகள் இறப்பு குறைவதற்கு சாலைகளில் நடைமேடை வசதி மேம்படுத்தப்பட்டு வருவதும், பாதசாரிகள் விழிப்புணர்வுடன் சாலையைக் கடந்து செல்வதும், ஆம்புலன்ஸ் வசதி மற்றும் மருத்துவமனை வசதி உடனடியாக கிடைப்பதுமே காரணம் என்று அவர்கள் கூறுகின்றனர்.
ஆண்டுதோறும் சாலை விபத்துகளினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 0.5 சதவிகிதமும், காயமடைவோரின் எண்ணிக்கை 3 சதவிகிதமும் அதிகரித்து வந்தது. இதில் இறப்பு எண்ணிக்கை குறைந்துவிட்ட நிலையில், காயமடைவோரின் எண்ணிக்கை அதே விகிதத்தில் அதிகரித்துள்ளது.
சாலை விதிமுறைகளை மீறுபவர்கள், போக்குவரத்து மீறல்களில் ஈடுபடுவோர் மீது போலீஸார் கடுமையான நடவடிக்கையை தொடர்ச்சியாக எடுத்து வருவதும், மக்களிடம் போக்குவரத்து விதிமுறை குறித்தான விழிப்புணர்வு ஏற்பட்டு வருவதும் இதற்குக் காரணமாக போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக கடந்த 2011-ல் 21,22,317 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2012-ல் மொத்தம் 33,48,904 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான வழக்குகள் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டியவர்கள், அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட கூடுதல் வேகத்தில் சென்றவர்கள், மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டியது உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகளை மீறியதால் பதிவு செய்யப்பட்டவையாகும்.
விபத்துகள் குறைந்து வருவது போக்குவரத்து பிரிவு போலீஸாரிடம் உற்சாகப்படுத்தி வரும் நிலையில், எதிர் வரும் நாள்களில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மீது மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்கவும், மக்களிடம் போக்குவரத்து விதிமுறை குறித்து இன்னும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் காவல்துறை திட்டமிட்டு வருகிறது. இதன் மூலம் சாலை விபத்துகள் மூலம் விலைமதிப்பில்லா உயிர்கள் பறிபோவதை தடுப்பதோடு மட்டுமன்றி மக்களுக்கு பாதுகாப்பான நிம்மதியான பயணத்தையும் வழங்க உறுதியளிக்க முடியும் என காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சென்னையில் கடந்த 2012 ம் ஆண்டில் ஏற்பட்ட பல்வேறு வாகனங்களால் ஏற்பட்ட சாலை விபத்துகளும், அதனால் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் விவரம்:
விபத்துகள்இறப்புகாயம்
மோட்டார் சைக்கிள்684667
பாதசாரிகள்564546
அரசு பஸ்கள்40104
காரினால் விபத்துகள்208
வாகனங்களில் இருந்து1515
கீழே விழுந்து விபத்து
விபத்துகளும் இறப்புகளும்
ஆண்டுஇறப்புகாயம்
200913267367
201014578234
201115048198
201214498361
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.