புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

மெட்ரோ ரயில்: 3 இடங்களில் இயங்கும் 5 -டனல் போரிங்- இயந்திரம்

சென்னையின் 3 இடங்களில் நடைபெறும் மெட்ரோ ரயில் பணியில் 5 "டனல் போரிங்' இயந்திரங்கள் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளன.

News image
Updated On :6 ஜனவரி 2013, 11:15 pm

சென்னையின் 3 இடங்களில் நடைபெறும் மெட்ரோ ரயில் பணியில் 5 "டனல் போரிங்' இயந்திரங்கள் சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளன. எவ்வித தங்கு தடையின்றியும் சுரங்கப் பாதை பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதன் காரணமாக திட்டமிட்டப்படி 2015-ம் ஆண்டு இறுதிக்குள் மெட்ரோ ரயில் பணிகள் முடிவடைந்துவிடும் என்று மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் 45 கிலோ மீட்டர் தொலைவில் ரயில் பாதை அமைக்கப்படுகிறது. இதில், 24 கிலோ மீட்டருக்கு சுரங்க வழியில் ரயில் பாதை அமைகிறது.

வண்ணாரப்பேட்டை - திரிசூலம் விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் பாதையில், வண்ணாரப்பேட்டை - சைதாப்பேட்டை இடையே சுரங்கப் பாதையிலும், சைதாப்பேட்டை - விமான நிலையம் இடையே தரைக்கு மேல் பாலத்திலும் ரயில் பாதை அமைக்கப் படுகிறது.

மெட்ரோ ரயில் திட்டத்தில், சுரங்க ரயில் பாதைகள் அமைப்பதற்கு, சீனா மற்றும் ஜெர்மனியில் இருந்து 12 "டனல் போரிங்' இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இதில் இப்போது பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள நேரு பூங்காவில் 2 டனல் போரிங் இயந்திரங்களும், வண்ணாரப்பேட்டையில் 2 டனல் போரிங் இயந்திரங்களும் சிந்தாதிரிப்பேட்டை மே தினப் பூங்காவில் ஒரு டனல் போரிங் இயந்திரமும் சுரங்கப்பாதை பணியில் ஈடுபட்டு வருகின்றன.

நேரு பூங்கா: பூந்தமல்லி நெடுஞ்சாலை நேரு பூங்காவில் இருந்து எழும்பூர் வரையிலும் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் டனல் போரிங் இயந்திரம் ஈடுபட்டுள்ளது. இதில் நேரு பூங்காவில் இருந்து எழும்பூர் வழித்தடத்தில் ஈடுபட்டுள்ள டனல் போரிங் இயந்திரம்.

ஏறத்தாழ 2 கிலோ மீட்டர் வரை சுரங்கம் தோண்டியுள்ளது.

இதே நேரு பூங்காவில் மற்றொரு பாதையில் இயக்கப்படும் டனல் போரிங் இயந்திரம் 1.2 கிலோ மீட்டர் வரையில் சுரங்கம் தோண்டியுள்ளது.

வண்ணாரப்பேட்டை: நெரிசல் மிகுந்த வண்ணாரப்பேட்டை பகுதியில் தாமதமாக தொடங்கப்பட்டாலும் சுரங்கப்பாதை பணி விறுவிறுப்பு அடைந்துள்ளது. வண்ணாரப்பேட்டையில் டனல் போரிங் இயந்திரம் 1.4 கிலோ மீட்டர் வரை சுரங்கம் தோண்டியுள்ளது.

மற்றொரு பாதையில் ஏறத்தாழ 1 கிலோ மீட்டர் வரை சுரங்கம் தோண்டியுள்ளது. மே தினப் பூங்காவில் இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள சுரங்கப் பாதை பணியில் டனல் போரிங் இயந்திரம் 9 வட்ட வடிவிலான வார்ப்புகளை பதித்துள்ளது.

சைதாப்பேட்டை மற்றும் ஷெனாய் நகரில் டனல் போரிங் இயந்திரத்தின் பாகங்களை ஒருங்கிணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பாகங்கள் அனைத்தும் இணைக்கப்பட்டு இன்னும் ஒரு வாரத்தில் சுரங்கப் பாதை தோண்டப்படும் பணிகள் நடைபெறும் என மெட்ரோ ரயில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.