தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வலியுறுத்தி வழக்குரைஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு
By dn | Published On : 06th September 2013 04:41 AM | Last Updated : 06th September 2013 04:41 AM | அ+அ அ- |

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்தி வழக்குரைஞர்கள் வெள்ளிக்கிழமை நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
கடந்த 2006-ஆம் ஆண்டு தமிழக பேரவையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப் பட்டது.
ஆனால் தமிழக சட்டப் பேரவையின் தீர்மானத்தை மத்திய அரசு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல், உச்ச நீதிமன்றத்திடம் கருத்து கேட்டு அனுப்பியது. அதில், தமிழை சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக ஆக்க வேண்டாம் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
இந்த நிலையில் வழக்குரைஞர்கள் வெள்ளிக்கிழமை நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தவுள்ளனர். சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்குரைஞர்கள் சங்கம், சென்னை பார் அசோசியேசன், பெண் வழக்குரைஞர்கள் சங்கம், தமிழ்நாடு வழக்குஞைர்கள் சங்கம் உள்பட அனைத்து சங்கங்களும் இந்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.