

சென்னை உயர் நீதிமன்ற முதல் பெண் நீதிபதி பத்மினி ஜேசுதுரை (84) சென்னையில் திங்கள்கிழமை காலமானார்.
அவருக்கு ஒரு மகனும், 3 மகள்களும் உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தைச் சேர்ந்த அவர், 1954-ஆம் ஆண்டு வழக்குரைஞராகப் பணியைத் தொடங்கினார். பிறகு, 1983-ஆம் ஆண்டு கூடுதல் அரசு வழக்குரைஞரானார். பின்னர் 1986-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1993-ஆம் ஆண்டு அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
மறைந்த பத்மினி ஜேசுதுரை, மத்திய நிர்வாகத் தீர்ப்பாய சென்னைக் கிளையின் துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.