காந்தியவாதி சசிபெருமாளின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தக் கோரிய வழக்கு வரும் அக்டோபர் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவரது மகன் விவேக் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார், அதில், எனது தந்தையின் மரணம் குறித்த உண்மை நிலையை அறிய தற்போது பணியில் உள்ள நீதிபதி அல்லது ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இது குறித்து தமிழக அரசு பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. பின்னர், தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கழுத்தில் கயிறு இறுகியதால்தான் மரணமடைந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
விசாரணைக்குப்பிறகு, வழக்கை வரும் அக்டோபர் 13-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

