தில்லி ஜந்தர் மந்தர் இனி போராட்டம் நடத்தும் இடமில்லை! உள்துறை அமைச்சகம்! தில்லி ஒரு சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது! ராகுல் காந்திஓனர்களின் பாணியில்... போராடவிருந்த மருத்துவப் பணியாளர்கள் வீட்டுக் காவல்! உதயநிதி கண்டனம்மரகதம் குமரவேல், சத்யபாமா தவெக எம்எல்ஏக்களாக பதவியேற்பு!பொய் பிரசாரங்களை முறியடித்து வெற்றி பெற்றுள்ளோம்: மரகதம் குமரவேல்லஞ்சம் கொடுத்ததற்கு தானே சாட்சி! மரிய வில்சனுக்கு எதிரான மனு தள்ளுபடிஜேஎன்யு மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு! காங்கிரஸ் எம்.பி. மீது எஃப்ஐஆர் பதிவு!இந்தியா கூட்டணி தலைவர்களை சந்திக்க தலைமை நீதிபதி மறுப்பு!

புதிய சிகிச்சையால் இருவருக்கு கண் பார்வை

கார்னியா பாதிக்கப்பட்ட இருவருக்கு புதிய தொழில்நுட்ப அடிப்படையில் கண் மாற்று அறுவைச் சிகிச்சை செய்து டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள் பார்வை அளித்துள்ளனர்.

Published On :

கார்னியா பாதிக்கப்பட்ட இருவருக்கு புதிய தொழில்நுட்ப அடிப்படையில் கண் மாற்று அறுவைச் சிகிச்சை செய்து டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள் பார்வை அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் அமர் அகர்வால் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

விழிவெண்படலம் (கார்னியா) பாதிக்கப்பட்டு பார்வையற்ற நிலையில் உள்ளோருக்கு விழிவெண்படல மாற்று சிகிச்சை மூலம் பார்வை அளிக்கலாம். விழிவெண்படல மாற்று அறுவைச் சிகிச்சை செய்து பார்வை அளிக்க முடியும். எனினும் தழும்புகளுடன் விழிவெண்படலம் இருக்கும்போது இச்சிகிச்சையால் பலன் கிடைக்காத நிலை ஏற்படலாம்.

இந்த நிலையில் "பிஇடிகே' (ப்ரீ டெஸிமட்ஸ் எண்டோதீலியல் கெரட்டோபிளாஸ்ட்டி)

என்ற புதிய தொழில்நுட்ப முறை மூலம், தானமாகப் பெற்ற விழிவெண்படலத்திலிருந்து ஒரு சிறு பகுதியை (25 மைக்ரான்) மட்டும் எடுத்து ஊசி மூலம் பாதிக்கப்பட்டவருக்குச் செலுத்தி பார்வை அளிக்க முடியும் என்றார் டாக்டர் அமர் அகர்வால்.

தழும்புகளுடன் கூடிய விழிவெண்படலத்தால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணன் (68), பார்வதி (56) ஆகியோர் மேலே குறிப்பிட்ட இந்தப் புதிய தொழில்நுட்ப சிகிச்சை மூலம் மீண்டும் பார்வை பெற்றுள்ளனர் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.