நாளை உருவாகிறது ‘அா்னாப்’ புயல்! தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை! இந்தியா - ரஷியா வா்த்தகத்தை விரிவாக்க மோடி, புதின் உத்தரவு!காா்கில் போரில் உயிரிழந்த வீரா்களின் உடல்களைப் பெற மறுத்தது பாகிஸ்தான்: இந்தியா விமா்சனம்பிரான்ஸில் தீவிர போராட்டம்: 4 லட்சம் போ் பங்கேற்பு! கண்ணீா்ப் புகை குண்டுகள் வீச்சு! பிரேஸில் அதிபா் தோ்தலில் இன்று இறுதிச் சுற்று வாக்குப்பதிவு!அமெரிக்க இடைத்தோ்தல் பரப்புரை: ஆபரேஷன் சிந்தூா் குறித்து மீண்டும் பேசிய டிரம்ப்

கிராவல் மணல் அள்ளுவதை எதிர்த்து வழக்கு:ஆய்வு செய்து அறிக்கை அளிக்க அரசுக்கு உத்தரவு

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள மானத்தாள் கிராம ஏரியில் கிராவல் மணல் அள்ளுவதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில், மணல் அள்ளுவதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு மண்ணியல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On :

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள மானத்தாள் கிராம ஏரியில் கிராவல் மணல் அள்ளுவதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில், மணல் அள்ளுவதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு மண்ணியல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுதொடர்பாக சேலம் மாவட்டம், ஓமலூர் தாலூகாவைச் சேர்ந்த அமாவாசை என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:

சேலம் மாவட்ட ஆட்சியர் கடந்த ஜூலை மாதம் பி.கார்த்திக் என்பவருக்கு மானத்தாள் கிராமத்தில் உள்ள ஏரியில் 7,083 லாரி லோடு அளவுக்கு கிராவல் மணல் அள்ள உரிமம் அளித்து பிறப்பித்த உத்தரவு, தமிழ்நாடு சிறு கனிமச் சலுகை விதிகளுக்கு எதிரானது. மேலும், மானத்தாள் கிராமத்தில உள்ள அந்த ஏரியை நம்பி சுமார் 350 குடும்பங்கள் உள்ளன. மேலும், 2,300 விவசாய குடும்பங்களுக்கு அந்த ஏரியைத் தவிர விவாசயப் பணிகளுக்கு வேறு நீராதாரம் கிடையாது. விவாசயத்தை நம்பித்தான் அந்த குடும்பங்கள் உள்ளன. இது தவிர, கிராவல் மணல் அள்ள அனுமதி வழங்கி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ள உத்தரவு, தாசில்தார், பொதுப் பணித் துறை செயற்பொறியாளர் ஆகியோர் அளித்த தவறான அறிக்கைகளின் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தாசில்தார் அளித்த அறிக்கையில், அந்த ஏரியில் தண்ணீர் இஜ்ல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, உண்மைக்குப் புறம்பானது. மேலும், அந்தப் பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட ஆழத்தைவிட கூடுதல் ஆழத்தில் மணல் அள்ளப்படுகிறது. இதுமட்டுமல்லாது, பொதுப் பணித் துறை அதிகாரிகள் பார்வையிடாமல் இரவு பகலாக அங்கு மணல் அள்ளப்படுகிறது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதோடு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலமையும் ஏற்படும்.

எனவே, மானத்தாள் கிராமத்தில் மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்கி மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்குப் பிறகு, இந்த வழக்கில் மண்ணியல், சுரங்கத் துறை ஆணையரையும் எதிர்மனுதாரராகச் சேர்க்கிறாம். மேலும், அந்த துறையின் ஆணையர் உயர் அதிகாரி ஒருவரை நியமித்து மானத்தாள் ஏரிப் பகுதியில் மணல் அள்ளப்படுவது குறித்து ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபகள், இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு பல்வேறு துறைகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.