தமிழக வனப் பகுதிகளில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் இதுவரை 9 புலிகள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டுள்ளதாக தேசிய புலிகள் பாதுகாப்பு நிறுவனத்தின் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. கடந்த வாரம கொடைக்கானல் பூம்பாறை கிராமத்தில் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட புலியும் இந்தக் கணக்கெடுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும், 2014 ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகப்படியான புலிகள் இறந்துள்ளன. தமிழகத்தில் மட்டும் 15 புலிகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளன. சில புலிகள் என்கவுன்ட்டர் சம்பவங்களிலும், வேட்டையாடப்பட்டும், விஷம் வைத்தும் கொல்லப்பட்டுள்ளன.
அதேநேரத்தில், கடந்தாண்டில் (2015) தமிழகத்தில் 6 புலிகள் மட்டுமே உயிரிழந்துள்ளன. ஆனால், என்ன காரணத்தால் புலிகள் உயிரிழந்தன என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழகத்துக்கு 4 ஆவது இடம்: 2014 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, புலிகளின் எண்ணிக்கையில் தமிழகத்துக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 229 புலிகள் உள்ளன.
களக்காடு முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை, சத்தியமங்கலம் புலிகள் பாதுகாப்பு சரணாலயங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் இது தெரிய வந்துள்ளது. புலிகளின் உயிரிழப்பு தொடர்ந்தாலும், முதுமலை, சத்தியமங்கலம் காடுகளில் அவற்றின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இதுகுறித்து கொடைக்கானல் மாவட்ட வன அதிகாரி வெங்கடேஷ் துரைராஜ் கூறியதாவது: பாதுகாக்கப்பட்ட புலிகள் காப்பகத்துக்கு வெளியே அல்லது அதை ஒட்டியுள்ள பகுதிகள் அனைத்திலும் விவசாய நிலங்கள் உள்ளன.
அங்கு விவசாயிகள் ஆடு, மாடுகளை வளர்க்கின்றனர். புலிகள் காப்புக் காடுகளைவிட்டு வெளியே செல்லும்போது இந்த ஆடு, மாடுகளைக் கொன்றுவிடுகின்றன. இதனால் கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
புலி எப்போதும் தனது இரையை 4 நாள்கள் வைத்து உண்ணும் பழக்கம் கொண்டது. புலி மிச்சம் வைத்துச் செல்லும் இரையில் கிராம மக்கள் விஷம் தடவி வைத்துவிடுகின்றனர். இதை அறியாத புலி அந்த விஷம் கலந்த இரையை உண்டு உயிரிழக்கிறது. கிராம மக்கள் தங்களது வாழ்வாதாரமான ஆடு, மாடுகளை இழப்பதால், புலியை விஷம் வைத்துக் கொல்கின்றனர். இது சட்டப்படி குற்றமாகும். மேலும், கிராம மக்களுக்கு புலிகள் குறித்து அதிக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், அப்போதுதான் புலிகள் விஷம் வைத்துக் கொல்லப்படுவதைத் தவிர்க்க முடியும் என்றார் அவர்.
தமிழகத்தில் 2014-இல் உயிரிழந்த புலிகள்
* ஜனவரி 21 - சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்
* ஜனவரி 23 - உதகமண்டலம்
* ஜனவரி 24 - முதுமலை புலிகள் காப்பகம்
* ஜனவரி 25 - ஆனைமலை புலிகள் காப்பகம்
* பிப்ரவரி 12 - சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்
* மார்ச் 17 - ஆனைமலை புலிகள் காப்பகம்
* மே 23 - நீலகிரி வனப் பகுதி
* ஜூலை 14 - முதுமலை வனப் பகுதி
* ஆகஸ்ட் 24 - முதுமலை புலிகள் காப்பகம்
* செப்டம்பர் 24 - முதுமலை புலிகள் காப்பகம்
* அக்டோபர் 5 - மசினக்குடி
* நவம்பர் 10 - முதுமலை வனப் பகுதி
* டிசம்பர் 4 - தலைமலை, சத்தியமங்கலம் வனப் பகுதி
* டிசம்பர் 14 - சேகூர், நீலகிரி வடக்குப் பகுதி
* டிசம்பர் 19 - சேகூர், நீலகிரி வடக்குப் பகுதி
2015-இல் உயிரிழந்த புலிகள்
* ஜனவரி 10 - தலைமலை, சத்தியமங்கலம் வனப் பகுதி
* ஜனவரி 21 - மசினக்குடி, முதுமலை வனச் சரகம்
* பிப்ரவரி 18 - கூடலூர்
* ஏப்ரல் 15 - தொரப்பள்ளி, முதுமலை வனச் சரகம்
* ஜூன் 26 - நம்பிகோயில், களக்காடு - முண்டந்துறை
* டிசம்பர் 17 - பவானிசாகர், சத்தியமங்கலம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வா் முன்னிலையில் திமுகவில் இணைந்த அமமுக மாநில நிா்வாகிகள்

இன்று மகிழ்ச்சி யாருக்கு? தினப்பலன்கள்!

பழங்குடியின மக்கள் தோ்தல் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

உத்தரமேரூா் அருகே மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்: அரசின் சாா்பில் அஞ்சலி
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


