எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ்: தனியார் கல்லூரிகளுக்கான கட்டணம் அறிவிப்பு

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Updated on
1 min read

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான ஆண்டுக் கட்டணம் ரூ.13,600. அரசு பல் மருத்துவப் படிப்புக்கான ஆண்டுக் கட்டணம் ரூ.11,600. கல்விக் கட்டணம், சிறப்புக் கட்டணம், வைப்பு நிதி, நூலகக் கட்டணம், பல்கலைக்கழக கட்டணம், காப்பீடு, செஞ்சிலுவைச் சங்கக் கட்டணம், கொடி நாள் கட்டணம், இதர கட்டணம் உள்ளிட்ட அனைத்தும் அடங்கும். அரசு கல்லூரிகளைப் பொருத்தவரை கடந்த ஆண்டு வசூலிக்கப்பட்ட கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிக்கு ரூ.24 ஆயிரம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 9 தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 18 பல் மருத்துவக் கல்லூரிகளின் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆண்டுக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கட்டண விவரம்:
கல்லூரி பெயர் - அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம்(லட்சங்களில்) - நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டணம் (லட்சங்களில்)
1. ஐஆர்டி பெருந்துறை மருத்துவக் கல்லூரி - 2.85 - 2.80
2. பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரி, கோவை - 4.00 - 12.50
3. கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி, மதுராந்தகம் - 3.85 - 12.50
4. வேலம்மாள் மருத்துவக் கல்லூரி - 3.90 - 12.50
5. தாகூர் மருத்துவக் கல்லூரி, சென்னை - 3.85 - 12.50
6. சென்னை எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி, திருச்சி - 3.85 - 12.50
7. தனலட்சுமி ஸ்ரீனிவாசன் மருத்துவக் கல்லூரி, பெரம்பலூர் - 4.00 - 12.50
8. ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவ அறிவியல் நிறுவனம், கன்னியாகுமரி - 3.90 - 12.50
9. அன்னபூர்ணா மருத்துவக் கல்லூரி - 3.85 - 12.50
பல் மருத்துவம்: 18 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.2.50 லட்சமும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.6 லட்சமும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு ரூ.23.50 லட்சமும், பிடிஎஸ் இடங்களுக்கு ரூ.9 லட்சமும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com