ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

கால் டாக்சி நிறுவனத்தில் ரூ. 2 கோடி முறைகேடு: 3 பேர் கைது

சென்னையில் இயங்கும் பிரபல கால் டாக்சி நிறுவனத்தில் ரூ.2 கோடி முறைகேடு செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Updated On :6 ஏப்ரல் 2018, 4:18 am IST

சென்னையில் இயங்கும் பிரபல கால் டாக்சி நிறுவனத்தில் ரூ.2 கோடி முறைகேடு செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் பிரபல கால் டாக்சி நிறுவனத்தின் நிர்வாக அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தின் கணக்குகள் அண்மையில் தணிக்கை செய்யப்பட்டன. அப்போது, அந்த அலுவலகத்தில் போலி பில்கள் மூலமாகவும், தவறான கணக்குகளை எழுதியும் சில ஊழியர்கள் ரூ. 2 கோடி வரை முறைகேடு செய்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அந்த கால் டாக்சி நிறுவனத்தின் நிர்வாகிகள், சென்னை பெருநகரக் காவல்துறையின் மத்தியக் குற்றப் பிரிவில் புகார் செய்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர்.
விசாரணையில், அந்த அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் யோகேஷ், ஜெயராஜ், சுரேஷ் ஆகியோர் வாடகை பணம் மூலமாக குறைவாக வருவாய் கிடைப்பதுபோல கணக்குக் காட்டி ரூ.2 கோடியை முறைகேடு செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவர்கள் 3 பேரையும் புதன்கிழமை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம், அந்த முறைகேடு குறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.