சென்னை ஜாபர்கான்பேட்டையில் வேன் ஓட்டுநரை தாக்கி ரூ.10 லட்சம் கொள்ளையடித்தது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
அரும்பாக்கம் திருவீதியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆ.அய்யாசாமி. இவர் கோயம்பேடு மார்க்கெட்டில் மளிகைப் பொருள்கள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவர் சென்னை முழுவதும் சிறு கடைகளுக்கு ஆர்டரின்பேரில் மளிகை பொருள்களை விற்பனை செய்கிறார்.
அய்யாசாமி கடை பொருள்களை விநியோகம் செய்யும் வேன் ஓட்டுநராக பணிபுரிபவர் ரமேஷ்குமார் (24), கிளீனராக பணிபுரிபவர் பாட்ஷா (47). இவர்கள் இருவரும் புதன்கிழமை இரவு பல்லாவரம், தியாகராய நகர், தேனாம்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள சில கடைகளில் பொருள்களை விநியோகம் செய்துவிட்டு, பணம் வசூலித்துக் கொண்டு கோயம்பேடு நோக்கி வேனில் வந்துகொண்டிருந்தனர்.
ஜாபர்கான்பேட்டை காசி திரையரங்கு அருகே 100 அடி சாலையில் செல்லும்போது, 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த அடையாளம் தெரியாத 6 பேர் வேனை வழிமறித்துள்ளனர். அவர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி, ரமேஷ்குமார், பாட்ஷா ஆகியோரை தாக்கி அவர்களிடம் இருந்த ரூ.10 லட்சத்தை பறித்துக் கொண்டு தப்பினர். இதுகுறித்து எம்ஜிஆர் நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்தனர்.
விசாரணையில், அய்யாசாமி கடையில் பணிபுரியும் சுரேஷ்குமாரும், அவரது கூட்டாளிகளும் சேர்ந்து இச்சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் சுரேஷ்குமார், அவரது கூட்டாளிகள் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ஷாஜஹான், செல்வம், கார்த்திக், மோகன் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போலீஸார் ரூ.8.5 லட்சத்தை பறிமுதல் செய்தனர். இந்த வழக்குத் தொடர்பாக போலீஸார் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்திய விளையாட்டு ஆணையத்தில் விளையாட்டுப் பயிற்சியாளர் பணி: 27-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!
குழந்தைத் தொழிலாளர்களா? திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!
ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!
ரொனால்டோ இரட்டை கோல்: 5-0 கணக்கில் உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியது போர்ச்சுகல்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


