எழும்பூர் ரயில் நிலையத்தில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நெகிழி ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், நாடு  முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் நெகிழி ஒழிப்பு, ரயில் நிலை
எழும்பூர் ரயில் நிலையத்தில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
Updated on
1 min read

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நெகிழி ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், நாடு  முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் நெகிழி ஒழிப்பு, ரயில் நிலையங்களை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும்,தூய்மை தொடர்பாக விழிப்புணர்வுப் பேரணி, கருத்தரங்கம் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், எழும்பூர் ரயில் நிலையத்தில் நெகிழி ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி மற்றும் தூய்மைப்படுத்தல் பணி சனிக்கிழமை நடைபெற்றது.  தூய்மைப்படுத்தும் பணியில்  ஸ்டெல்லா மேரி மகளிர் கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் எழும்பூர் ரயில் நிலைய இயக்குநர் ஜெய வெங்கடேசன், ரயில்வே துப்பரவு பணியாளர்கள், தனியார் தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் என்று மொத்தம் 150 பேர் பங்கேற்றனர். 

ரயில் நிலைய வளாகத்தில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். 

இதை தொடர்ந்து, பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வுப் பேரணியும், நெகிழியை ஒழிப்பது தொடர்பாக விழிப்புணர்வு நாடகமும் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com