திமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தனை தற்காலிகமாக இடைநீக்கம் செய்து, அக் கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தருமபுரி நகரைச் சேர்ந்த வ.முல்லைவேந்தன் கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் என்று அதில் கூறப்பட்டுள்ளது. தருமபுரி தொகுதியில் போட்டியிடும் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு ஆதரவாகச் செயல்பட்டார் என்கிற தகவலின் அடிப்படையில் திமுகவிலிருந்து முல்லைவேந்தன் நீக்கி வைக்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.