மாநகராட்சி இணைப்புப் பகுதிகள் பிறப்பு, இறப்பு சான்றிதழை இணையத்தில் பெறலாம்
By DIN | Published On : 04th August 2019 03:13 AM | Last Updated : 04th August 2019 03:13 AM | அ+அ அ- |

சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இணையதளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.
அந்த ஆவணங்கள் அனைத்தும் ஏற்கெனவே கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிக்குள்பட்ட பிறப்பு, இறப்பு விவரங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. அதன்படி, www.chennaicorporatiom.gov.in என்ற இணையதளபக்கத்தில் இருந்து அந்த ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பிறப்பு, இறப்பு சம்பவங்கள் நேர்ந்து ஓராண்டாகியும் அதனை பதிவு செய்யாதவர்கள், சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர்களின் உத்தரவுக்கேற்ப அதற்கான பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...