பர்னிச்சர் கடையில் தீ விபத்து
By DIN | Published On : 06th February 2019 04:10 AM | Last Updated : 06th February 2019 04:10 AM | அ+அ அ- |

சென்னை முகப்பேரில் பர்னிச்சர் கடையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமானது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை முகப்பேர் மேற்கு பிரதான சாலையில் பேருந்து நிறுத்தம் அருகே காதர் மொய்தீன் என்பவருக்கு சொந்தமான பர்னிச்சர் கடை இரண்டு தளங்கள் உள்ள கட்டடத்தில் செயல்படுகிறது. இந்தக் கட்டடத்தில் ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக தரை
தளத்தில் இருந்த சில பொருள்கள் செவ்வாய்க்கிழமை மாலை திடீரென எரியத் தொடங்கியது.
தகவலறிந்த ஜெ.ஜெ.நகர் தீயணைப்பு படையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் தீ அந்த கட்டடம் முழுவதும் பரவியது.
இதையடுத்து கோயம்பேடு, அம்பத்தூர், அண்ணாநகர் ஆகிய இடங்களில் இருந்து கூடுதலாக தீயணைப்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். சுமார் இரண்டு மணிநேர போராட்டத்துக்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது. இருப்பினும் அந்த தரைதளம், முதல் தளம், இரண்டாவது தளம் ஆகியவற்றில் இருந்த அனைத்து பர்னிச்சர்களும் எரிந்து நாசமானது. இவற்றின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த விபத்தின் காரணமாக அந்தப் பகுதியில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. மேலும் போக்குவரத்தும் திருப்பிவிடப்பட்டது. இதுகுறித்து நொளம்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...