காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது
By DIN | Published On : 04th January 2019 04:35 AM | Last Updated : 04th January 2019 04:35 AM | அ+அ அ- |

சென்னையில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டம் தொடர்பாக விவசாய சங்க நிர்வாகிகள் 25 பேருடன் தலைமைச் செயலகத்தில் மின்துறை அமைச்சர் பி.தங்கமணி தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் விவசாயிகளின் பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததாகக் கூறப்பட்டது.
இப்பேச்சுவார்த்தைக்காக 13 மாவட்டங்களில் இருந்து வந்திருந்த சுமார் 600 விவசாயிகள், சேப்பாக்கம் அரசு விருந்தினர் இல்லம் அருகே காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள், போராட்டத்தைக் கைவிட மறுப்புத் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...