ஜன.10-இல் பி.எஃப். குறைதீர் கூட்டம்
By DIN | Published On : 04th January 2019 04:34 AM | Last Updated : 04th January 2019 04:34 AM | அ+அ அ- |

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி (பி.எஃப்.) குறைதீர் கூட்டம் சென்னை முகப்பேர் கிழக்கில் உள்ள அம்பத்தூர் பி.எஃப். மண்டல அலுவலகத்தில் ஜனவரி 10 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இது குறித்து பி.எஃப். மண்டல ஆணையர் ஓ.வி.நிஷா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்த மாதத்துக்கான பி.எஃப். குறைதீர் கூட்டம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், ஆர் 40 ஏ, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அலுவலக வளாகம், முகப்பேர் சாலை, முகப்பேர் கிழக்கு, சென்னை-37 என்ற முகவரியில் வரும் வியாழக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.
இதில் வருங்கால வைப்புநிதி சந்தாதாரர்கள், நிறுவனங்களின் உரிமையாளர்கள், பி.எஃப். பங்களிப்பிலிருந்து விலக்கு பெற்ற அம்பத்தூர் எல்லைக்கு உள்பட்ட நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 044 -26350080, 26350120 என்ற அலுவலகத் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.