எஸ்.ஐ. மாதிரித் தேர்வு, 7-இல் வழிகாட்டும் முகாம்
By DIN | Published On : 03rd July 2019 04:23 AM | Last Updated : 03rd July 2019 04:23 AM | அ+அ அ- |

காவல் உதவி ஆய்வாளர் மாதிரித் தேர்வு மற்றும் தேர்வுக்கான வழிகாட்டும் முகாம், வரும் 7-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை அண்ணாநகர், திருமங்கலத்தில் உள்ள ஃபோக்ஸ் அகாதெமியில் நடைபெறுகிறது.
இதில், பங்கேற்க உள்ள தேர்வர்களுக்காக ஃபோக்ஸ் அகாதெமி சார்பில் வழிகாட்டும் முகாமில் காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் துறை வல்லுநர்கள் கலந்து கொண்டு மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கிறார்கள். அதே போல் மாதிரித் தேர்வும் நடத்தப்பட உள்ளது. இதற்கான அனுமதி இலவசம். இதில் கலந்து கொள்ள விரும்புவோர் தங்களது சுய விவரங்களுடன், அண்ணாநகர், திருமங்கலத்தில் ஜெ.ஜெ. வளாகத்தில் செயல்பட்டு வரும் ஃபோக்ஸ் அகாதெமியில் நேரில் வந்து முன்பதிவு செய்யலாம். தொடர்புக்கு 044 26155686, 7010136605.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G