ஊரகத் திறனாய்வுத் தேர்வு: 9-ஆம் வகுப்பு: மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 15th July 2019 02:03 AM | Last Updated : 15th July 2019 02:03 AM | அ+அ அ- |

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவ - மாணவிகள் ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு ஜூலை 15-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத் துறை அழைப்பு விடுத்துள்ளது.
கிராமங்களில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் மாணவர்களுக்கான, ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு, திங்கள்கிழமை (ஜூலை 15) முதல் விண்ணப்பிக்கலாம். நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளில் படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
வரும் 25-ஆம் தேதிக்குள் தலைமை ஆசிரியர் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என அரசுத் தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.
பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவர்கள், 50 மாணவியர் தேர்வு செய்யப்படுகின்றனர். பிளஸ் 2 படிக்கும் வரை ஆண்டுக்கு ரூ.1,000 கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.