மாடியிலிருந்து விழுந்து கார் ஓட்டுநர் பலி
By DIN | Published On : 15th July 2019 02:05 AM | Last Updated : 15th July 2019 02:05 AM | அ+அ அ- |

சென்னை வடபழனியில் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்த கார் ஓட்டுநர் இறந்தார்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் கிராமம் மேட்டுச் தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி (28) கார் ஓட்டுநர். இவர் வடபழனி பெரியார் சாலையில் உள்ள வீட்டின் 3-ஆவது தளத்தில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்தார். இந்த நிலையில், சனிக்கிழமை இரவு திடீரென பெரியசாமி 3-ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து வடபழனி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G