பொன்னேரி கோட்டத்தில் இன்று மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
By DIN | Published On : 14th June 2019 04:21 AM | Last Updated : 14th June 2019 04:21 AM | அ+அ அ- |

பொன்னேரி கோட்டத்தில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தாம்பரம் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டமானது, பொன்னேரி துணை மின்நிலைய வளாகத்தில் உள்ள செயற் பொறியாளர், இயக்கம் மற்றும் பராமரித்தல் அலுவலகத்தில், வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 14) காலை 10.30 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளைத் தெரிவித்து உரிய தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.