மண்ணிவாக்கத்தில் குடிநீர் விநியோகிக்க ரூ.8 லட்சத்தில் கிணறு அமைக்கும் பணி
By DIN | Published On : 14th June 2019 04:23 AM | Last Updated : 14th June 2019 04:23 AM | அ+அ அ- |

சென்னை தாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கத்தில் நிலவி வரும் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு பிரச்னைக்குத் தீர்வு காண குடிநீர் கிணறு அமைக்க வேண்டும் என்று தினமணியில் செய்தி வெளியானது.
இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பி.பொன்னையா மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக, மண்ணிவாக்கம் தாமரைத் தாங்கலில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ. 8 லட்சம் செலவில் குடிநீர் கிணறு அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகின்றது.
இது குறித்து காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து சுந்தரம் பேசும்போது, குடிநீர் தட்டுப்பாடு காரணமாக மண்ணிவாக்கத்தில் நடைபெற்று வரும் கிணறு அமைக்கும் பணி 10 நாட்களில் நிறைவடையும். இந்தக் கிணறு மூலம் பெறப்படும் குடிநீர், மண்ணிவாக்கம் காலனி பகுதியில் வசிக்கும் சுமார் 400 குடியிருப்புகளுக்கு வழங்கப்பட உள்ளது என்றார்.