ஆவடி மாநகராட்சி: வளர்ச்சிப் பணிகளுக்கு வாய்ப்பு: அமைச்சர் பாண்டியராஜன்

ஆவடி நகராட்சியானது, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதால் என்னென்ன பயன்கள் ஏற்படும் என்பது குறித்து, அந்தத் தொகுதியின் எம்எல்ஏவும், அமைச்சருமான க. பாண்டியராஜன் விளக்கம் அளித்தார்.


ஆவடி நகராட்சியானது, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதால் என்னென்ன பயன்கள் ஏற்படும் என்பது குறித்து, அந்தத் தொகுதியின் எம்எல்ஏவும், அமைச்சருமான க. பாண்டியராஜன் விளக்கம் அளித்தார்.
இதுகுறித்து அவர் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி: ஆவடியில் இயற்கைப் பூங்கா ரூ.32 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. அது புதன்கிழமை திறந்து வைக்கப்படுகிறது. ஆவடி நகராட்சிப் பகுதியில் 5.2 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். 48 வார்டுகள் கொண்ட ஆவடி நகராட்சி மட்டுமே தரம் உயர்த்தப்படுகிறது. ஆவடிக்கு அருகில் உள்ள நகரங்கள் மாநகராட்சியோடு இணையுமா, இணையாதா என்பது இப்போது கூற முடியாது. அதுகுறித்து அரசு முடிவெடுக்கும்.
கிடைக்கும் பயன்கள்: மாநகராட்சியாக தரம் உயர்வதன் மூலம், பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் திட்டம், வளர்ச்சித் திட்டங்கள், கிடைக்க வாய்ப்பு உள்ளது. மத்திய அரசின் நிதிகள் அதிகளவு கிடைப்பதுடன், அதைக் கொண்டு வளர்ச்சித் திட்டப் பணிகளை நிறைவேற்ற முடியும். இப்போதும் வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ரூ.2 கோடி செலவில் ரயில்நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவை நிறைவுற்றதும் குறைந்தது 3 விரைவு ரயில்களாவது ஆவடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல கோரிக்கை வைக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com