காலமானார் கல்யாணி
By DIN | Published On : 22nd March 2019 04:07 AM | Last Updated : 22nd March 2019 04:07 AM | அ+அ அ- |

சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகத்தின் மனைவி கல்யாணி (78) உடல்நலக் குறைவு காரணமாக சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) காலமானார்.
அவரது உடலுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள், வழக்குரைஞர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
நீதிபதி வள்ளிநாயகம்-கல்யாணி தம்பதிக்கு கோமதிலட்சுமி, பொன்னி ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். கல்யாணியின் இறுதிச் சடங்குகள் கண்ணம்மாபேட்டை மயானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...