கூவத்தூர் சம்பவத்தில் நேர்மையான விசாரணை: இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
By DIN | Published On : 22nd March 2019 04:09 AM | Last Updated : 22nd March 2019 04:09 AM | அ+அ அ- |

கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் பிரசவம் பார்த்த விவகாரத்தில் நேர்மையான விசாரணை நடத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் பாதுகாப்பற்ற முறையில் பிரசவங்கள் நடைபெறுவது அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. இதனால் பேறு காலத்தில் தாய்மார்களும், பச்சிளங் குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனர்.
24 மணி நேரமும் மருத்துவர்கள் மருத்துவமனையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதேபோன்று, அறுவை சிகிச்சை அரங்கம் உள்ளிட்ட வசதிகள் இருப்பதற்கு மாநில அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும். கூவத்தூரில் செவிலியர்கள் பிரசவம் பார்த்து குழந்தையின் தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.
இதுகுறித்து நேர்மையான விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...