போலி ஆவணங்கள் மூலம் விசா பெற முயற்சி: இருவர் சிக்கினர்
By DIN | Published On : 30th March 2019 04:12 AM | Last Updated : 30th March 2019 04:12 AM | அ+அ அ- |

சென்னையில் உள்ள கொரிய தூதரகத்தில் போலி ஆவணங்கள் மூலம் விசா பெற முயற்சித்த இருவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் தென் கொரிய தூதரகம் உள்ளது. இங்கு நாமக்கல் மாவட்டம், வேப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த பெரியசாமி (36), கடலூர் மாவட்டம் தொழுர் கிராமத்தைச் சேர்ந்த பிரதீப் (26) ஆகிய இருவரும் விசாவுக்காக விண்ணப்பித்தனர்.
இதற்கான ஆவணங்களை இருவரும் வியாழக்கிழமை அளித்தனர். அந்த ஆவணங்களை தூதரக அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் அவை போலியானவை என்பது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் தூதரக அதிகாரிகள் பிடித்து, மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...