அமேசான் போட்டியில் வென்ற எழுத்தாளருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

அமேசான் நிறுவனம் சார்பில் நடைபெற்ற நெடும் படைப்புப் போட்டியில் பரிசு பெற்றுள்ள செந்தில் பாலனுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக் கூறியுள்ளார்.
Updated on
1 min read

அமேசான் நிறுவனம் சார்பில் நடைபெற்ற நெடும் படைப்புப் போட்டியில் பரிசு பெற்றுள்ள செந்தில் பாலனுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக் கூறியுள்ளார்.
 இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: அமேசான் நிறுவனம் உலகளாவிய அளவில் நடத்திய போட்டியில் தமிழ் மொழிக்கான நெடும் படைப்புப்பிரிவில் திராவிட இயக்கத்தின் இளம் எழுத்தாளரான டாக்டர் செந்தில் பாலன் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது. பல்வேறு மொழிகளைச் சேர்ந்த சுமார் 3,000 எழுத்தாளர்கள் பங்கேற்ற போட்டியில், செந்தில் பாலன் எழுதிய "பரங்கிமலை இரயில் நிலையம்' என்ற புதினம், போட்டிக்கான நடுவர்களால் தேர்வு செய்யப்பட்டு ரூ.5 லட்சம் பரிசாகப் பெற்றுள்ளது. இத்தகைய மகத்தான வெற்றியை பெற்ற செந்தில் பாலனுக்கு மனம் கனிந்த வாழ்த்துகள். அதேபோல், 2,000 முதல் 10,000 வரையிலான வார்த்தைகள் கொண்ட குறும்படைப்புப் பிரிவில், பத்திரிகையாளர் விக்னேஷ் சி செல்வராஜ், எழுதிய நீள் கட்டுரையும் பரிசு பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com