"பானி' புயல்: சென்னை-ஷாலிமருக்கு சிறப்பு ரயில்
By DIN | Published On : 05th May 2019 02:22 AM | Last Updated : 05th May 2019 02:22 AM | அ+அ அ- |

"பானி' புயல் காரணமாக ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு பதிலாக, சென்னை-ஷாலிமருக்கும், சென்னை-புவனேஷ்வருக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
சென்னை-ஷாலிமர்: சென்னை சென்ட்ரலில் (டாக்டர் எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையம்) இருந்து ஞாயிற்றுக்கிழமை (மே 5) மாலை 4.25 மணிக்கு ஒரு வழி சிறப்பு ரயில் (06166) புறப்பட்டு, திங்கள்கிழமை (மே 6) இரவு 9.30 மணிக்கு ஷாலிமரை சென்றடையும். இந்த சிறப்பு ரயில் சூலூர்பேட்டை, கூடூர் சந்திப்பு, நெல்லூர், விஜயவாடா, விசாகப்பட்டினம் உள்பட பல்வேறு நிறுத்தங்களில் நின்று செல்லும்.
இதுதவிர, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மே 6-ஆம் தேதி புவனேஸ்வரத்து ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த இரண்டு சிறப்பு ரயில்களுக்கான கட்டணம் வழக்கமான சிறப்பு கட்டணமாக இருக்கும். இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (மே 5) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...