பி.எஸ்.என்.எல் தலைமைப் பொது மேலாளர் பொறுப்பேற்பு
By DIN | Published On : 15th May 2019 04:10 AM | Last Updated : 15th May 2019 04:10 AM | அ+அ அ- |

பி.எஸ்.என்.எல். சென்னை தொலைபேசி நிறுவனத்தின் புதிய தலைமைப் பொது மேலாளராக பி.சந்தோஷம் பொறுப்பேற்று கொண்டார்.
பி.எஸ்.என்.எல். சென்னை தொலைபேசி நிறுவனத்தின் தலைமை பொதுமேலாளராக இருந்த எஸ்.எம். கலாவதி, தொலைதொடர்பு துறை தமிழக வட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, பி.எஸ்.என்.எல். சென்னை தொலைபேசி நிறுவனத்தின் தலைமைப் பொதுமேலாளராக பி.சந்தோஷம் கடந்த வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர், சென்னை இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மின்னணுத் துறையில் இளநிலை பட்டமும், மனிதவளத் துறையில் முதுநிலை பட்டமும் பெற்றவர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், கர்நாடகம், நாகலாந்து ஆகிய மாநிலங்களிலும் தொலைத் தொடர்புத் துறையில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.