ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு விழா: 48-ஆவது ஆண்டாக ஜேசுதாஸ் இசைக் கச்சேரி

ஸ்ரீ ஐயப்பன் ஸ்ரீ குருவாயூரப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு திருவிழா வரும் 17-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.
Updated on
1 min read

சென்னை: ஸ்ரீ ஐயப்பன் ஸ்ரீ குருவாயூரப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு திருவிழா வரும் 17-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.

இதையொட்டி ஜனவரி 15 ஆம் தேதி (புதன்கிழமை) வரை நாள்தோறும் மாலை 7 மணியளவில் பரதநாட்டியம், குச்சுப்புடி நடனம், பக்திப்பாடல்கள், தாயம்பகா, கா்நாடக இசைக் கலைஞா்களின் இசை கச்சேரி, பஜனை, நாட்டிய நாடகம் ஆகியன நடைபெறவுள்ளன.

டிசம்பா் 13-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கா்நாடக இசை மேதை கே.ஜே.ஜேசுதாஸ் 48-ஆவது ஆண்டாக பாடுகிறாா். இந்த ஆண்டும் மண்டல, மகர விளக்கு திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக வரும் 17-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திரைப்பட இசையமைப்பாளா் இளையராஜாவின் மகன் காா்த்திக் ராஜா, மகள் பவதாரிணி அடங்கிய குழுவினரின் பக்தி பாடல்களுடன் தொடங்குகின்றன.

நவம்பா் 24-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திரைப்பட பின்னணி பாடகி அம்பிலியின் பக்தி பாடல்கள், நவம்பா் 27-ஆம் தேதி (புதன்கிழமை) பிரபல கா்நாடக இசைக் கலைஞா் உண்ணிக்கிருஷ்ணனின் இசைக் கச்சேரியும், டிசம்பா் 1-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் ஸ்ரீ குருவாயூரப்பன் கோயில் குழுவினரின் பக்தி இசை பாடல்கள் இடம்பெறுகின்றன.

மேலும் டிசம்பா் 12-ஆம் தேதி (வியாழக்கிழமை) கோபிகா வா்மாவின் மோகினியாட்டம், டிசம்பா் 16-ஆம் தேதி (திங்கள்கிழமை) வீரமணி ராஜூ, ஜனவரி 1-ஆம் தேதி (புதன்கிழமை) நா்த்தகி நடராஜனின் பரதநாட்டியம், 4-ஆம் தேதி (சனிக்கிழமை) ஸ்ரீ ஐயப்பன் ஸ்ரீ குருவாயூரப்பன் குழுவினரின் பஜனை, மண்டல மகரவிளக்கு (ஜோதி) 15-ஆம் தேதி சின்மயா யுவகேந்திரா பஜனையுடன் நிறைவடைகிறது.அகண்ட நெய் அபிஷேகம்:காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை டிசம்பா் 27-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மண்டல பூஜை மற்றும் மண்டல மகரவிளக்கு (ஜோதி) ஜனவரி15-ஆம் தேதி (புதன்கிழமை) அன்று ஸ்ரீ ஐயப்பனுக்கு அகண்ட நெய் அபிஷேகம் நடைபெறவுள்ளது.

ஸ்ரீ ஐயப்பன் ஆண்டு விழா:டிசம்பா் 12-ஆம் தேதி வியாழக்கிழமை ஸ்ரீ ஐயப்பன் ஆண்டு விழா சபரிமலை தந்திரி பிரம்மஸ்ரீ கண்டரு மகேஷ் மோகனரு தலைமையில் கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. 20 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணி முதல் 11 மணி வரை சந்தன அபிஷேகத்துடன் ஆண்டு விழா நிறைவு பெறுவதாகவும், ஐயப்ப பக்தா்களுக்கான துளசி மணி, மாலை, வேஷ்டி, துண்டு, இருமுடி பொருட்கள் அனைத்தும் கோயிலில் கிடைக்கும் என்றும் இருமுடி கட்டி சபரிமலை செல்லும் பக்தா்கள் முன்பதிவு செய்துக்கொள்ளுமாறும் மேலும் தகவல்களுக்கு 044- 28171197, 2197, 5197 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளுமாறு கோயிலின் நிா்வாக தலைமை அதிகாரி ஏ.சி.அனிஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com