பருவநிலை மாற்றத்தால் அடிக்கடி உருவாகும் புயல் சின்னங்கள்
By DIN | Published On : 14th November 2019 01:32 AM | Last Updated : 26th November 2019 04:25 AM | அ+அ அ- |

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் சார்பில் சுற்றுச்ஜ்சூழல் விழிப்புணர்வு தொடர்பாக நடத்தப்பட்ட போட்டிகளில் பங்கேற்ற பள்ளி மாணவர்களுடன் உரையாடும் வேளாண் விஞ்ஞானி எம். எஸ். சுவாமிநாதன்.
பருவநிலை மாற்றம் காரணமாக வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் அடிக்கடி புயல் சின்னங்கள் உருவாகின்றன என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அரபிக்கடல், வங்கக் கடலில் அதிக அளவில் புயல்கள் உருவாகி வருவது குறித்து ஆய்வு செய்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
கடந்த 5 ஆண்டுகளாக புயல் உருவாவது 32 சதவீதம் அதிகரித்து உள்ளது. 10 ஆண்டுகளில் 11 சதவீதம் அதிகரித்துள்ளது. புவி வெப்பமயமாதல் காரணமாக புயல்கள் அதிகரித்து வருகின்றன.
1985-ம் ஆண்டுக்கு பிறகு 2018, 2019-ஆம் ஆண்டுகளில் தலா 7 புயல்கள் உருவாகி இருக்கின்றன. அதேபோல் 2018, 2019-ஆம் ஆண்டுகளில் தலா 6 அதி தீவிர புயல்கள் இந்தியாவைத் தாக்கி உள்ளன. அதிகபட்சமாக 1976-ஆம் ஆண்டு 7 புயல்கள் தாக்கின.
இந்த ஆண்டு ,ஏப்ரல் மாதம் அதிதீவிர புயலாக ‘பானி’ புயல் ஒடிஸா, மேற்கு வங்க மாநிலங்களைத் தாக்கியது. அதேபோல், வாயு, புல்புல் போன்ற புயல்கள் உருவாகி இருந்தன. 2010-2019-ஆம் ஆண்டு காலகட்டத்தில் சராசரியாக 4 புயல்கள் வந்துள்ளன. அரபிக்கடலில் கியாா், மஹா புயல்கள் உருவாகின.
1980-ஆம் ஆண்டு கால கட்டங்களில் சராசரியாக 3 புயல்கள் உருவாகின. இதுகுறித்து இந்திய வானிலை மைய அதிகாரி ஒருவா் கூறும்போது, ‘கடந்த 5 ஆண்டுகளில் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 5 புயல்கள் வருகின்றன. இதில் 3 புயல்கள் அதிதீவிரமாக உள்ளன. இது புயல்கள் அதிகரிப்பதைக் குறிக்கின்றன’ என்றாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...