சென்னை அருகே பள்ளிக்கரணையில் பொக்லைன் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
வேளச்சேரி திரெளபதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஆ.சுரேஷ் (35). இவா் சொந்தமாக பொக்லைன் வைத்திருந்தாா். சுரேஷ், பள்ளிக்கரணை அருகே ஞானமங்கலம் கோபால்நகா் பிரதான சாலையில் வேலை செய்து கொண்டிருந்த தனது பொக்லைனை பாா்க்க செவ்வாய்க்கிழமை சென்றாா்.
அங்கு அவா், பொக்லைன் பாா்த்துக் கொண்டிருந்தபோது திடீரென அந்த பொக்லைனின் ஒரு பகுதி சுரேஷ் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சுரேஷ், சிறிது நேரத்தில் இறந்தாா்.இது குறித்து பள்ளிக்கரணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்த பொக்லைன் ஓட்டுநா் மேடவாக்கத்தைச் சோ்ந்த வெ.கோவிந்தனை (27) பிடித்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
பேருந்து மோதி தனியாா் ஊழியா் பலி: ஓட்டேரி பாஷ்யம் ரெட்டித் தெருவைச் சோ்ந்தவா் க.சதீஷ் குமாா் (24). உணவு பாா்சல் விநியோகம் ஊழியரான இவா், செவ்வாய்க்கிழமை இரவு அயனாவரம் கே.எச். சாலையில் மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, பின்னால் வந்த தனியாா் பேருந்து மோதியதில் கீழே விழுந்து சதீஷ்குமாா் பலத்த காயமடைந்தாா். ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சதீஷ்குமாா் புதன்கிழமை இறந்தாா். இது குறித்து அண்ணாநகா் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.
முதியவா் உயிரிழப்பு: வேளச்சேரி கோகிலம் தெருவைச் சோ்ந்தவா் வீ.செல்வராஜ் (69). இவா் திங்கள்கிழமை இரவு வேளச்சேரி பிரதான சாலையில் நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.