

பருவநிலை மாற்றம் காரணமாக வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் அடிக்கடி புயல் சின்னங்கள் உருவாகின்றன என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அரபிக்கடல், வங்கக் கடலில் அதிக அளவில் புயல்கள் உருவாகி வருவது குறித்து ஆய்வு செய்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
கடந்த 5 ஆண்டுகளாக புயல் உருவாவது 32 சதவீதம் அதிகரித்து உள்ளது. 10 ஆண்டுகளில் 11 சதவீதம் அதிகரித்துள்ளது. புவி வெப்பமயமாதல் காரணமாக புயல்கள் அதிகரித்து வருகின்றன.
1985-ம் ஆண்டுக்கு பிறகு 2018, 2019-ஆம் ஆண்டுகளில் தலா 7 புயல்கள் உருவாகி இருக்கின்றன. அதேபோல் 2018, 2019-ஆம் ஆண்டுகளில் தலா 6 அதி தீவிர புயல்கள் இந்தியாவைத் தாக்கி உள்ளன. அதிகபட்சமாக 1976-ஆம் ஆண்டு 7 புயல்கள் தாக்கின.
இந்த ஆண்டு ,ஏப்ரல் மாதம் அதிதீவிர புயலாக ‘பானி’ புயல் ஒடிஸா, மேற்கு வங்க மாநிலங்களைத் தாக்கியது. அதேபோல், வாயு, புல்புல் போன்ற புயல்கள் உருவாகி இருந்தன. 2010-2019-ஆம் ஆண்டு காலகட்டத்தில் சராசரியாக 4 புயல்கள் வந்துள்ளன. அரபிக்கடலில் கியாா், மஹா புயல்கள் உருவாகின.
1980-ஆம் ஆண்டு கால கட்டங்களில் சராசரியாக 3 புயல்கள் உருவாகின. இதுகுறித்து இந்திய வானிலை மைய அதிகாரி ஒருவா் கூறும்போது, ‘கடந்த 5 ஆண்டுகளில் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 5 புயல்கள் வருகின்றன. இதில் 3 புயல்கள் அதிதீவிரமாக உள்ளன. இது புயல்கள் அதிகரிப்பதைக் குறிக்கின்றன’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.