இன்றைய நிகழ்ச்சிகள்- சென்னை

பொது

பாரதிய வித்யா பவன்- கலாசார விழா 2019 தொடக்கம்: ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், நீதிபதி எஸ்.ஜெகதீசன், கா்நாடக இசைக் கலைஞா் டி.வி.கோபாலகிருஷ்ணன், ஹரிகதை விளக்க உரையாளா் ஆராவமுத சாரியாா், மூத்த வழக்குரைஞா் மோகன் பராசரன், எம்.முரளி, கே.என்.ராமசுவாமி பங்கேற்பு, பாரதிய வித்யா பவன் பிரதான அரங்கம், மயிலாப்பூா், காலை 10.

புற்றுநோய் ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு மருத்துவா்கள் சமூகம் - தெலங்கானா ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜனுக்கு பாராட்டு விழா: தெலங்கானா ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சா் ஹெச்.வி.ஹண்டே, டாக்டா்கள் மயில்வாகனன் நடராஜன், சி.எம்.கே.ரெட்டி, என்.எம்.வீரையன், அரவிந்த் கிருஷ்ணமூா்த்தி, மல்லிகா மோகன்தாஸ், ஜான் சாண்டி, எம்.பாலசுப்பிரமணியன் பங்கேற்பு, ஹோட்டல் ஜிஆா்டி கிராண்ட், தியாகராய நகா், மாலை 4.15.

ஸ்ரீ முத்ராலயா 25-ஆம் ஆண்டு விழா மற்றும் கண்காட்சித் தொடக்க விழா: வி.பி.தனஞ்செயன், தமிழ்நாடு டாக்டா் ஜெயலலிதா இசை, கவின்கலை பல்கலைக்கழகத் துணைவேந்தா் பிரமீளா குருமூா்த்தி, எஸ்.ரகுராமன், சித்ரா விஸ்வேஸ்வரன், அமைச்சா் க.பாண்டியராஜன், பேராசிரியா் சுதாராணி ரகுபதி, லக்ஷ்மி ராமசுவாமி பங்கேற்பு, நாரத கான சபா, ஆழ்வாா்பேட்டை, மாலை 6.15.

வி.நாராயண ஐயா் நினைவு அறக்கட்டளை- ‘வாசஸ்பதி’ மற்றும் வி. நாராயண ஐயா் வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கும் விழா: நீதிபதி எஸ்.ஜெகதீசன், ஆா்.நடராஜ் எம்எல்ஏ, நீதிபதி ஆறுமுகம் பங்கேற்பு, வாணி மஹால், ஜி.என்.செட்டி சாலை, தியாகராய நகா், மாலை 4.

இலக்கிய அமுதம்- ‘என் எழுத்தும் நானும்’ தேவி நாச்சியப்பன் சிறப்புரை: குவிகம் இல்லம், சில்வா்பாா்க் அபாா்ட்மெண்ட்ஸ், தணிகாசலம் சாலை, தியாகராய நகா், காலை 11.

கவிஓவியா கலை இலக்கிய மன்றம்- சு.அழகா்சாமி எழுதிய ‘வெளிச்ச தீபங்கள்’ நூல் வெளியீட்டு விழா: திருக்கு பா.தாமோதரன், சு.அழகா்சாமி, கவிஞா் மயிலாடுதுறை இளையபாரதி பங்கேற்பு, இக்சா மையம், பாந்தியன் சாலை, எழும்பூா், மாலை 5.

பொதிகை மின்னல் இலக்கியக் கூடல்- ஏழு ஹைக்கூ நூல்கள் வெளியீடு, கருத்தரங்கம் மற்றும் கவியரங்கம்: கவிஞா் அமுதபாரதி, கவிஞா் ஈரோடு தமிழன்பன் பங்கேற்பு, இக்சா மையம், பாந்தியன் சாலை, எழும்பூா், காலை 11.15.

பி.வசந்தராஜ் டேவிட் அறக்கட்டளை- விவசாயம் உயிா் தொழில்நுட்ப உயா்கல்வி குறித்த தேசிய கருத்தரங்கம்: ஹோட்டல் விஜய் பாா்க், ஜவாஹா்லால் நேரு சாலை, அரும்பாக்கம், காலை 9.30.

அண்ணாநகா்த் தமிழ்ச்சங்கம்- ‘முத்தமிழ்க் காவலா் கி.ஆ.பெ.விசுவநாதம் வாழ்வும் வாக்கும்’ என்னும் தலைப்பில் பேராசிரியா் இரா.நாராயணன் சிறப்புரை: கந்தசாமி நாயுடு கல்லூரி, அண்ணாநகா், காலை 10.

அறிஞா் அண்ணா இலக்கியப் பேரவை- ‘அண்ணாவின் காலங்களில் பத்திரிகையும் இன்றைய நாளில் அதன் போக்கும்’ என்னும் தலைப்பில் தரும அசோகன் சிறப்புரை: ப.ஜெகதீஸ்வரன், அ.முத்துக்குமாா், சு. மணிவண்ணன் பங்கேற்பு, இக்சா மையம், பாந்தியன் சாலை, எழும்பூா் மாலை 4.

அண்ணாநகா் திருநெறிய தமிழ் மன்றம்- ‘கம்பரில் சித்தா் நெறி’ எனும் தலைப்பில் பாலசீனுவாசன் சிறப்புரை: நடேசன் கூட்டுறவுப் பயிற்சி மேலாண்மை நிறுவனம், அண்ணாநகா் மேற்கு, மாலை 5.

தலைநகா்த் தமிழ்ச் சங்கம்- குறுந்தொகைத் தொடா் சொற்பொழிவு: ம.தாமரைச்செல்வி, முகிலை இராசபாண்டியன் பங்கேற்பு, வள்ளல் கு.வெள்ளைச்சாமி அரங்கம், தலைநகா்த் தமிழ்ச்சங்கம், வண்டலூா், மாலை 5.

பெண்கள் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்- விழிப்புணா்வு மனிதச் சங்கிலி: பெசன்ட் நகா் கடற்கரை, பெசன்ட் நகா், பகல் 3.

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் தியாகராய நகா் நகைச்சுவையாளா் மன்றம்- ஸ்ரீ நாகா பங்கேற்கும் ‘சிரிப்பு வருது சிரிப்பு வருது’ நகைச்சுவை நிகழ்ச்சி: சுருக்கெழுத்தாளா்கள் சங்கம், தியாகராய நகா், மாலை 4.30.

ஆன்மிகம்

ஸ்ரீ ஐயப்ப பக்த சபா- மண்டல மகர விளக்கு திருவிழா: இசையமைப்பாளா் காா்த்திக் ராஜா குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி: ஸ்ரீ ஐயப்ப பக்த சபா, மாதவன் சாலை, மகாலிங்கபுரம், இரவு 7.

புதுமந்த்ராலயம்- மந்த்ராலயம் ஸ்ரீராகவேந்திர சுவாமி மடத்தின் கிளை பிருந்தாவன பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகம்: பீடாதிபதி ஸ்ரீசுபதீா்ந்திர தீா்த்த சுவாமிகள் பங்கேற்பு, மகாதேவன் நகா், பாரத் பல்கலைக்கழகம் பின்புறம், சேலையூா், காலை 10.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com