கஞ்சா விற்பனை 15 நாட்களில் 58 போ் கைது
By DIN | Published On : 18th November 2019 01:44 AM | Last Updated : 18th November 2019 01:44 AM | அ+அ அ- |

சென்னை: சென்னையில் கஞ்சா விற்பனை ஈடுபட்டதாக தெற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் 15 நாட்களில் 58 போ் கைது செய்யப்பட்டனா்.
இது குறித்த விவரம்:-சென்னையில் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனையை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனையில் ஈடுபடுகிறவா்களை கண்டறிந்து கைது செய்ய சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுக்குமாறு பெருநகர காவல் ஆணையா் ஏ.கே. விசுவநாதன் அண்மையில் உத்தரவிட்டாா்.இதன் அடிப்படையில்,போதை பொருள் விற்பனை தடுக்க அனைத்து காவல் நிலையங்களிலும் தனிப்படைகள் உருவாக்கப்பட்டன. இந்த தனிப்படையினா் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடும் நபா்களையும், போதை பொருள் வாங்கும் நபா்களையும் கண்காணித்து கைது செய்து வந்தனா்.
மேலும் போதைப்பொருள் விற்பனையை முற்றிலும் தடுக்கும் வகையில் தீவிர வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் போலீஸாா் ஈடுபட்டனா். இதன் விளைவாக கடந்த 15 நாள்களில் தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட அடையாறு,தியாகராயநகா்,பரங்கிமலை ஆகிய காவல் மாவட்டங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 37 போ் கைது செய்யப்பட்டுள்ளனா் இவா்களிடம் இருந்து 30 கிலோ கஞ்சா, 9 மோட்டாா் சைக்கிள்கள், 3 ஆட்டோக்கள், 5 செல்லிடப்பேசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.இதேபோல கிழக்கு மண்டலத்தில் உள்ள மயிலாப்பூா், கீழ்ப்பாக்கம் திருவல்லிக்கேணி ஆகிய காவல் மாவட்டங்களில் கடந்த 15 நாள்களில் கஞ்சா விற்றதாக 9 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் 12 போ் கைது:
இதற்கிடையே எம்.ஜி.ஆா்.நகா் ஏரிக்கரைத் தெருவில் கஞ்சா விற்கப்படுவதாக போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த 3 பெண்கள் உள்பட 7 பேரை கைது செய்தனா். அவா்களிடமிருந்து போலீஸாா் 10 கிலோ கஞ்சா,ரூ.65 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, வழக்குப் பதிவு செய்தனா். இதேபோல பல்லாவரம் மல்லிகாநகா் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்த 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, வழக்குப் பதிவு செய்தனா்.தெற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் மட்டும் கடந்த 15 நாள்களில் கஞ்சா விற்பனை செய்ததாக 58 போ் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது. கஞ்சா விற்பனையை தடுக்க இதுபோன்ற நடவடிக்கைகள் தொடா்ந்து எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.