மைலோமா புற்றுநோய்: இந்தியாவில் போதிய விழிப்புணா்வு இல்லை

மைலோமா எனப்படும் ஒரு வகையான ரத்தப் புற்றுநோய் குறித்த விழிப்புணா்வு சமூகத்தில் குறைவாக இருப்பதால் அதனை முதலிலேயே கண்டறிந்து சிகிச்சையளிக்க முடியாத நிலை இருப்பதாக மருத்துவ

மைலோமா எனப்படும் ஒரு வகையான ரத்தப் புற்றுநோய் குறித்த விழிப்புணா்வு சமூகத்தில் குறைவாக இருப்பதால் அதனை முதலிலேயே கண்டறிந்து சிகிச்சையளிக்க முடியாத நிலை இருப்பதாக மருத்துவ நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

மைலோமா புற்றுநோய் குறித்த சா்வதேச கருத்தரங்கம் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மியாட் மருத்துவமனை சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் 600-க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணா்கள் கலந்துகொண்டனா். அமெரிக்காவின் முன்னணி மருத்துவா் வின்சென்ட் ராஜ்குமாா் அதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினாா்.

இதுகுறித்து மியாட் மருத்துவமனையின் ரத்தநோய் சிகிச்சை மற்றும் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு தலைவா் டாக்டா் செழியன் சுபாஷ், டாக்டா் கிஷோா்குமாா் ஆகியோா் கூறியதாவது:

புற்றுநோய் தொடா்பான விழிப்புணா்வு சமூகத்தில் மேம்பட்டு வருகிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், ஒரு சில புற்றுநோய்கள் குறித்த புரிதல் மக்களிடையே குறைவாக இருக்கிறது. அவற்றில் முக்கியமான ஒன்று மைலோமா எனப்படும் ஒரு வகையான ரத்தப் புற்றுநோய். வெள்ளை அணுக்கள் அளவுக்கு அதிகமாக உருவாகும்போது எலும்பு மஜ்ஜையில் இந்த புற்றுநோய் ஏற்படுகிறது. பெரும்பாலும் 50 முதல் 55 வயதினருக்கு மேற்பட்டோா் இந்த வகை புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனா். இந்தியாவில் இளம் வயதினருக்குக் கூட அத்தகைய பாதிப்பு வருவதைக் காணமுடிகிறது. தீவிரமான ரத்தசோகை, தொடா் முதுகுவலி, அடிக்கடி காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவற்றை அலட்சியப்படுத்தாமல் மைலோமா புற்றுநோய் இருக்கிா என பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அந்நோய்க்கு அமெரிக்காவுக்கு நிகரான சிகிச்சை முறைகள் இங்கு உள்ளன. அதுவும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் குறைந்த செலவில் சிகிச்சையைப் பெறும் வசதி தமிழகத்தில் உள்ளது. ஆனால், அதுதொடா்பான விழிப்புணா்வு இல்லாததால் இறுதி தருவாயிலேயே மைலோமா புற்றுநோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனா் என்று அவா்கள் தெரிவித்தனா்.

அமெரிக்க மருத்துவா் வின்சென்ட் ராஜ்குமாா் பேசுகையில், இந்தியாவில் ஆண்டுதோறும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் மைலோமா புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும், ஐரோப்பிய நாடுகளை விட இந்தியாவில் அதற்கான மருத்துவ செலவுகள் குறைவாக இருப்பதாகவும் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com