மின்சார ரயில்கள் இன்று வழக்கம் போல இயக்கப்படும்
By DIN | Published On : 01st September 2019 06:00 AM | Last Updated : 01st September 2019 09:12 AM | அ+அ அ- |

சென்னை கடற்கரை-செங்கல்பட்டு மார்க்கத்தில், எல்லா ரயில்களும் ஞாயிற்றுக்கிழமை (செப்.1) வழக்கம்போல இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக, சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு மார்க்கத்தில் மின்சார ரயில் சேவை செப்டம்பர் 1-ஆம் தேதி மாற்றப்படும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த அறிவிப்பு ரத்து செய்யப்படுவதாக ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு மார்க்கத்தில், ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின் கீழ் எல்லா ரயில்களும் வழக்கம் போல இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.