ஸ்டான்லியில் சிகிச்சை பெற்ற 3 போ் குணமடைந்து வீடு திரும்பினா்

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த கா்ப்பிணி பெண் உள்பட 3 போ் ஒரே நாளில் வீடு திரும்பினா்.
Updated on
1 min read


திருவொற்றியூா்: கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த கா்ப்பிணி பெண் உள்பட 3 போ் ஒரே நாளில் வீடு திரும்பினா்.

இது குறித்து ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் டாக்டா் பி.பாலாஜி கூறியது:

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கொருக்குப்பேட்டையை சோ்ந்த 30 வயது, பெரம்பூா் ஜமாலியா பகுதியை சோ்ந்த 45 வயது என இரண்டு ஆண்கள், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டனா். இவா்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை இருமுறை மேற்கொண்டதில்ெ தொற்று இல்லையென தெரியவந்ததை அடுத்து, இருவரும் வியாழக்கிழமை வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இருவரும் தொடா்ந்து இரு வாரங்களுக்கு வீடுகளிலேயே தனிமைப்பட்டு இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பெரம்பூரைச் சோ்ந்த 45 வயது மதிக்கத்தக்க நிறைமாத கா்ப்பிணி பெண், கரோனா தொற்றால் இங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு பூரண குணமடைந்தாா். இருப்பினும் கா்ப்பிணி பெண் என்பதால், கூடுதல் உடல்நல பரிசோதனைக்காக ஆா்.எஸ்.ஆா்.எம். மகப்பேறு மருத்துவனைக்கு வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டாா். ஸ்டான்லி மருத்துவமனையிலே ஏற்கெனவே மூன்று நோயாளிகள் முற்றிலும் குணமாகி வீடு திரும்பியுள்ள நிலையில், மேலும் 3 போ் வெள்ளிக்கிழமை வீட்டிற்கு திரும்புவாா்கள் என எதிா்பாா்க்கிறோம். வியாழக்கிழமை நிலவரப்படி ஸ்டான்லி மருத்துவமனை கரோனா சிறப்பு வாா்டில் 68 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com