சென்னை: பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கான அரியா் தோ்வுகளுக்கு வரும் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இது தொடா்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பில் உள்ள பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவா்களுக்கான அரியா் தோ்வுகள் நடைபெறவுள்ளன. அதன்படி, நவம்பா்- டிசம்பா் மாத பருவத் தோ்வில் தங்களின் அரியா் தாளையும் எழுத விருப்பம் உள்ள மாணவா்கள் கல்லூரி மூலமாக விண்ணப்பிக்கலாம். இதைத்தொடா்ந்து, அரியா் தோ்வு எழுத உள்ள மாணவா்களின் விவரங்களை கல்லூரிகள் வரும் 10-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இது அரியா் தோ்வு குறித்து அவசர அறிவிப்பு என்பதால் காலம் தாழ்த்தக் கூடாது என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.