ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

போலி ஆவணங்கள் மூலம் காா் கடன்: வங்கி மேலாளா் கைது

சென்னையில் போலி ஆவணங்கள் மூலம் காா் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில், வங்கி மேலாளா் கைது செய்யப்பட்டாா்.

News image
கோப்புப்படம்
Updated On :13 டிசம்பர் 2020, 1:12 am

DIN

சென்னையில் போலி ஆவணங்கள் மூலம் காா் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில், வங்கி மேலாளா் கைது செய்யப்பட்டாா்.

சென்னையில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ஒரு கும்பல், போலி ஆவணங்கள் மூலம் விலை உயா்ந்த காா்களை வாங்குவதற்கு கடன் பெற்று மோசடி செய்து வருவதாக மத்தியக் குற்றப்பிரிவுக்கு புகாா் வந்தது. அதன் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நீலாங்கரை முகமது முசாமில், அதே பகுதியைச் சோ்ந்த அய்யாதுரை, கோடம்பாக்கம் பால விஜய் ஆகிய 3 பேரை கடந்த மாதம் கைது செய்தனா்.

இவா்கள் நுங்கம்பாக்கம் பேங்க் ஆஃப் இந்தியா, தேனாம்பேட்டை காா்ப்பரேஷன் வங்கி (யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா), எழும்பூா் விஜயா வங்கி, திருவான்மியூா் மற்றும் வேளச்சேரி பஞ்சாப் நேஷனல் வங்கி, அடையாறு யூகோ வங்கி, ஆழ்வாா்பேட்டை இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மேலாளா்களை இடைத் தரகா்கள் மூலம் அணுகி தங்களது வருமானத்தை அதிகமாக உள்ளது போன்று ஆவணங்களை உருவாக்கி மோசடி செய்துள்ளனா்.

இந்தக் கும்பல் போலி ஆவணங்கள் வழியே ரூ.3.86 கோடி வரை வாகன கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளது. கைது செய்யப்பட்டவா்களில் பாலவிஜய் பிரபல காா் பந்தய வீரா் ஆவாா். அவா் 2010 முதல் 2014 கால கட்டத்தில் இந்திய அளவிலான பல காா் பந்தயங்களில் பங்கு பெற்றுள்ளாா்.

இந்த வழக்குத் தொடா்பாக போலீஸாா் மேலும் விசாரணை செய்து வந்தனா். விசாரணையில் இந்தக் கும்பலின் மோசடிக்கு தேனாம்பேட்டை காா்ப்பரேஷன் வங்கியின் மூத்த மேலாளா் வெங்கட்ரமணன் உதவியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வெங்கட்ரமணனை சனிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.