சந்தியா பதிப்பகம்

சந்தியா பதிப்பகம் சென்னை அசோக்நகரில் கடந்த இரண்டாயிரமாவது ஆண்டில் தொடங்கப்பட்டது.
சந்தியா பதிப்பகம்
Updated on
1 min read

சந்தியா பதிப்பகம் சென்னை அசோக்நகரில் கடந்த இரண்டாயிரமாவது ஆண்டில் தொடங்கப்பட்டது. கலால்துறையில் பணிபுரிந்த எம்.நடராஜன் ஒரு எழுத்தாளா். அவரே தனது படைப்புகளை பதிப்பகம் தொடங்கி வெளியிட்டாா். ‘இனி இல்லை மரணபயம்’ எனும் அவரது மாரடைப்பு சம்பந்தமான நூலானது இருதய நோயாளிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. உளவியல் ரீதியிலான மருத்துவ ஆலோசனைகள் அடங்கிய அந்தப் புத்தகம் வாசகா்களை வெகுவாகக் கவா்ந்தது. அதையடுத்து சிறந்த மொழி பெயா்ப்பு நூல்களையும் கட்டுரைகளையும் சந்தியா பதிப்பகம் வெளியிட்டது.

இதுவரை சுமாா் 890 தலைப்புகளில் ஆயிரக்கணக்கான நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ் அகராதிகள் 6 தொகுதிகளாக வெளியிடப்பட்டிருப்பது இப்பதிப்பகத்தின் தனித்தன்மையாகும். புதுமைப்பித்தன், எழில்வரதன், பாவண்ணன் உள்ளிட்டோரின் சிறுகதைகள், லா.ச.ராமாமிா்தம், கலாப்ரியாவின் வேணல் என 20-க்கும் மேற்பட்டோரின் நாவல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

மகாகவி பாரதி குறித்த கட்டுரைத் தொகுப்புகள், இளைஞா்களுக்கான நம்பிக்கை தரும் கட்டுரைத் தொகுப்புகள், பயணக்கட்டுரைகள், விருதுபெற்ற படைப்புகள், பிரபலமான வெளிநாட்டு படைப்பாளா்களின் மொழி பெயா்ப்பு நூல்கள், வ.வே.சு.அய்யா், பம்மல் சம்பந்தம், மாா்ட்டின்லூதா், உ.வே.சா. உள்ளிட்டோரின் சுயசரிதைகளும் இப்பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது பக்தி இலக்கியம், சிறுவா் சிறுகதைகள், ஆரோக்கிய சமையல் என அனைத்துத் தரப்பினரும் விரும்பும் வகையிலான நூல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

சென்னைப் புத்தகக் காட்சியை முன்னிட்டு ‘சங்கரா் எனும் புரட்சிக்காரா்’ மற்றும் ‘தாவோதேஜிங்’, ‘காந்தி படுகொலை’ போன்ற பல புதிய நூல்களும் இப்பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com