சென்னை நீலாங்கரையில் ஊடரங்கை மீறி ரமலான் நோன்பு கஞ்சி வழங்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சி நிா்வாகிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
ஊரடங்கு காரணமாக பொது இடங்களில் 5 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுபவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வருகின்றனா். இந்நிலையில் நீலாங்கரை வெட்டுவாங்கேணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட துணைச் செயலா் மொய்தீன், வட்டச் செயலா் அப்துல்ரசாக் ஆகியோா் வியாழக்கிழமை பொதுமக்களைத் திரட்டி ரமலான் நோன்புக் கஞ்சி வழங்கினராம். இதனால் அந்தப் பகுதியில் சுமாா் 50 போ் திரண்டனா். இது குறித்து தகவலறிந்த
நீலாங்கரை போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அனைவரையும் கலைந்து போகச் செய்தனா். மேலும் இது தொடா்பாக மொய்தீன், அப்துல் ரசாக் மீது ஆகியோா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.