கரோனா பாதிப்பு: சென்னையில் 1,724-ஆக உயர்வு

சென்னையில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,724-ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக திருவிக நகர் மண்டலத்தில் 357 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா பாதிப்பு: சென்னையில் 1,724-ஆக உயர்வு
Updated on
1 min read


சென்னை: சென்னையில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,724-ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக திருவிக நகர் மண்டலத்தில் 357 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் கரோனாவின் தாக்கம்  தொடக்கத்தில் இருந்தே அதிகரித்து வந்தது. இந்நிலையில்,  அதிகபட்சமாக திங்கள்கிழமை மட்டும் 266 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,724-ஆக உயர்ந்துள்ளது. 

இதில், திரு.வி.க. நகர் மண்டலத்தில் 357 பேரும், ராயபுரம் மண்டலத்தில் 299 பேரும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 257 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 206 பேரும், அண்ணா நகர் மண்டலத்தில் 144 பேரும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 136 பேரும்,  வளசரவாக்கம் மண்டலத்தில்  114 பேரும், அம்பத்தூர் மண்டலத்தில் 67 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 9 வயதுக்குள் 25 பெண் குழந்தைகளும், 28 ஆண் குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள்  -  1724
குணமடைந்தவர்கள்  -  264
உயிரிழந்தவர்கள்  -  18
சிகிச்சை பெற்று வருவோர்   - 1,437
பிற மாவட்டங்களைச் சேர்ந்தோர் -   5

மண்டலம் எண்ணிக்கை
திருவொற்றியூர்    -29
மணலி   - 10
மாதவரம் -   24
தண்டையார்பேட்டை  -  136
ராயபுரம்    -299
திரு.வி.க. நகர்  -  357  
அம்பத்தூர்   - 67
அண்ணா நகர்    -144
தேனாம்பேட்டை    -206
கோடம்பாக்கம்    -257
வளசரவாக்கம்   -114
ஆலந்தூர்    -10
அடையாறு  -  44
பெருங்குடி    -12
சோழிங்கநல்லூர்    10
பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்     5
மொத்தம்    1,724

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com