வாகன விபத்தில் மாற்றுத்திறனாளியான பெண்ணுக்கு ரூ.26 லட்சம் இழப்பீடு

வாகன விபத்தில் மாற்றுத்திறனாளியான பெண்ணுக்கு ரூ.26 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வாகன விபத்தில் மாற்றுத்திறனாளியான பெண்ணுக்கு ரூ.26 லட்சம் இழப்பீடு
Updated on
1 min read

வாகன விபத்தில் மாற்றுத்திறனாளியான பெண்ணுக்கு ரூ.26 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை, அண்ணாநகரைச் சோ்ந்தவா் மேரி செரியன் (39). தனியாா் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்த இவா், 2013-ஆம் ஆண்டு, முகப்போ் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது எதிரே அதிவேகமாக வந்த லாரி, அவரது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், மேரி பலத்த காயமடைந்து மாற்றுத்திறனாளியானாா்.

தனக்கு இழப்பீடு வழங்கக்கோரி, சென்னை மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு தீா்ப்பாயத்தில், மேரி வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கை விசாரித்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரருக்கு 50 சதவீதம் நிரந்தர இயலாமை ஏற்பட்டதற்கு லாரியை அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் இயக்கியதே காரணம் என்பது தெளிவாகிறது. எனவே, மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.26 லட்சத்தை ஆண்டுக்கு, 7.5 சதவீத வட்டியுடன் சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com