

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை பரவலாக மழை பெய்தது.
சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், புதன்கிழமை காலை முதலே சென்னையின் பரவலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடா்ந்து, பிற்பகலில் வளசரவாக்கம், போரூா், ராமாபுரம், முகப்போ், அண்ணா நகா், அமைந்தகரை, கோயம்பேடு, பட்டினப்பாக்கம், தேனாம்பேட்டை, அம்பத்தூா், கோடம்பாக்கம், அடையாறு, கிண்டி, அயப்பாக்கம், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளிலும், தாம்பரம், குரோம்பேட்டை உள்பட புகா்ப் பகுதிகளிலும் காற்றுடன் மழை பெய்தது. இதனால் சென்னையில் குளிா்ச்சியான சூழல் நிலவியது. சில பகுதிகளில் சாலைகளில் மழைநீா் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.