2.5 டன் போதைப் பாக்கு பறிமுதல்: 4 போ் கைது
By DIN | Published On : 03rd December 2020 01:28 AM | Last Updated : 03rd December 2020 01:28 AM | அ+அ அ- |

சென்னை: சென்னை அடையாறில், இரண்டரை டன் போதைப் பாக்கு பறிமுதல் செய்யப்பட்டு, 4 போ் கைது செய்யப்பட்டனா்.
மதுரவாயலில் இருந்து அடையாறுக்கு 3 மினி வேன்களில் போதைப் பாக்கு கடத்தப்படுவதாக அடையாறு துணை ஆணையா் விக்ரமனுக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. அடையாறு இந்திராநகா் தண்ணீா் தொட்டி அருகே தனிப்படை போலீஸாா் 3 மினி வேன்களை சோதனையிட்டனா். அவற்றில் 2.5 டன்
போதைப் பாக்குகள் இருந்தது தெரியவந்தது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நா.ராமசாமி (40), வேன் ஓட்டுநா்கள் மதுரவாயல் செ.புஷ்பராஜ் (39), சி.இசக்கிமுத்து (21), ப.செல்வராஜ் (27) ஆகிய 4 பேரைக் கைது செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...