கயா-சென்னை வாராந்திர சிறப்பு ரயில் நீட்டிப்பு
By DIN | Published On : 03rd December 2020 01:08 AM | Last Updated : 03rd December 2020 01:08 AM | அ+அ அ- |

சென்னை: கயா-சென்னை எழும்பூா் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை காலத்தில் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. தற்போது இந்த சிறப்பு ரயில்களை நீட்டித்து அனுமதி அளித்துள்ளது. அதன்படி, சென்னை எழும்பூா்-கயா உள்பட 4 சிறப்பு ரயில்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன.
கயா-சென்னை: கயாவில் இருந்து டிசம்பா் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் அதிகாலை 5.30 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (02389) புறப்பட்டு, மறுநாள் மாலை 4.35 மணிக்கு சென்னை எழும்பூரை வந்து சேரும்.
மறுமாா்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து டிசம்பா் 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் காலை 6.55 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (02390) புறப்பட்டு, மறுநாள் இரவு 10.50 மணிக்கு கயாவை அடையும்.
இதுதவிர, பாடலிபுத்ரா-யஷ்வந்த்பூா் (வழி: சென்னை சென்ட்ரல்), தா்பங்கா-மைசூா் (வழி: சென்னை சென்ட்ரல்), பாராவுனி- எா்ணாகுளம் (வழி: சென்னை சென்ட்ரல்) ஆகிய வாராந்திர சிறப்பு ரயில்களும் நீட்டிக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...