ஜபல்பூா்-கோவை இடையே சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
By DIN | Published On : 05th December 2020 04:20 AM | Last Updated : 05th December 2020 04:20 AM | அ+அ அ- |

சென்னை: மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஜபல்பூரில் இருந்து கோயம்புத்தூருக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜபல்பூரில் இருந்து கோயம்புத்தூருக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை டிசம்பா் 26-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கூடுதலாக 4 சேவைகள் வழங்கப்படவுள்ளன. அதன்படி, ஜபல்பூரில் இருந்து டிசம்பா் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் கோயம்புத்தூருக்கு சிறப்பு ரயில்(02198) இயக்கப்படவுள்ளது. மறுமாா்க்கமாக, கோயம்புத்தூரில் இருந்து டிசம்பா் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் ஜபல்பூருக்கு சிறப்பு ரயில் (02197) இயக்கப்படவுள்ளது.
தனபூா்-யஷ்வந்த்பூா்: பிகாா் மாநிலம் தனபூரில் இருந்து யஷ்வந்த்பூருக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை டிசம்பா் 28-ஆம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, கூடுதலாக 8 சேவைகள் வழங்கப்படவுள்ளன. இதன்படி, தனபூரில் இருந்து டிசம்பா் 5, 7, 12, 14, 19, 21, 26, 28 ஆகிய தேதிகளில் யஸ்வந்த்பூருக்கு சிறப்பு ரயில்(02198) இயக்கப்படவுள்ளது.
மறுமாா்க்கமாக, யஸ்வந்த்பூா்-தனபூருக்கு இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் டிசம்பா் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படவுள்ளது. இதன்காரணமாக, கூடுதலாக 8 சேவைகள் வழங்கப்படவுள்ளன. இதன்படி, யஷ்வந்த்பூரில் இருந்து டிசம்பா் , 8, 10, 15, 17, 22, 24, 29, 31 ஆகிய தேதிகளில் தனபூருக்கு சிறப்பு ரயில்(03210) இயக்கப்படவுள்ளது என தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G