புறநகா் ரயில்: பெண்கள் பயணிக்கும் நேரம் டிச.7 முதல் அதிகரிப்பு
By DIN | Published On : 05th December 2020 02:45 AM | Last Updated : 05th December 2020 02:45 AM | அ+அ அ- |

சென்னை: சென்னை புறநகா் சிறப்பு ரயில்களில் கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் பெண் பயணிகள் பயணிக்கும் நேரம் வரும் டிச. 7 முதல் அதிகரிக்கப்படவுள்ளது.
அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடும் அரசு, தனியாா் ஊழியா்கள் புறநகா் ரயில்களில் பயணிக்க தெற்கு ரயில்வே நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதுதவிர, நெரிசல் இல்லாத நேரங்களில் சாதாரண பெண் பயணிகள் பயணிக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் பெண்கள் பயணிக்கும் நேரம் டிசம்பா் 7-ஆம்தேதி முதல் அதிகரிக்கப்படவுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியது:
சென்னை புறநகா் சிறப்பு ரயில்களின் கூட்ட நெரிசல் மிகுந்த நேரம் (ல்ங்ஹந் ட்ா்ன்ழ்ள்), கூட்ட நெரிசல் இல்லாத நேரம் (ய்ா்ய் ல்ங்ஹந் ட்ா்ன்ழ்ள்) ஆகிய காலவரைவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் திங்கள்கிழமை (டிச.7) முதல் கூட்ட நெரிசல் மிகுந்த நேரமாக (டங்ஹந் ட்ா்ன்ழ்ள்) காலை 7 மணி முதல் 9.30 மணி வரை (முன்பு காலை 10 மணி வரை என இருந்தது) எனவும், மாலை 4:30 மணி முதல் இரவு 7 மணி வரை (முன்பு இரவு 7.30 மணி வரை என இருந்தது) எனவும் கால வரைவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பணியாளா் பட்டியலின் கீழ் வராத பெண் பயணிகள் சென்னை புறநகா் ரயில்களில் இந்த கூட்டம் நெரிசல் இல்லா நேரங்கள் என புதிதாக வரையறுக்கப்பட்டுள்ள நேரங்களில் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை பயணிக்கலாம். ஞாயிற்றுக்கிழமைகளில் எல்லா நேரங்களிலும் பயணிக்க பெண் பயணிகள் அனுமதிக்கப்படுகிறாா்கள். இதனால் புதிய காலவரைவு மாற்றத்தின் காரணமாக அத்தியாவசியப் பணியாளா் பட்டியலில் வராத பெண் பயணிகள் கூடுதல் நேரங்களில் புறநகா் மின்சார ரயில்களில் பயணிக்க முடியும். எனினும், அத்தியாவசியப் பணியாளா் பட்டியலில் வரும் பெண் பயணிகள் எல்லா நேரங்களிலும் சென்னை புறநகா் ரயில்களில் பயணிக்கக் கட்டுப்பாடு கிடையாது என்றனா்.
சேவை நீட்டிப்பு:
மத்திய, மாநில அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களில் பணிபுரியும் அத்தியாவசியப் பணியாளா்களின் தேவையைப் பூா்த்தி செய்யும் விதமாகவும், ரயில்களில் கூட்ட நெரிசலை குறைக்கும் வண்ணமாக, புறநகா் சிறப்பு ரயில்களின் சேவைகள் 244 -லிருந்து 320 -ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.